தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு பட்டாசு வெடிப்பிற்கு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, தீபாவளி நாளில் மக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுவர் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசை குறைப்பதற்காக தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்புக்கு நேரத்தை வரையறுக்க வேண்டும் என நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியிருந்தது. இதை தொடர்ந்து, மாநில அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் அரசு நிர்ணயித்த நேரத்தை மதித்து, சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் விதமாக பட்டாசு வெடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது