மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள தேவையான பிரத்யேக ஆயத்தப் பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன்அவர்கள் அறிவித்துள்ளார். மாண்புமிகு மாநில மீன்வளம், நிதி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சரின் 12.11.2017 சட்டமன்ற அறிவிப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு வருடம் தோறும் 20 பேருக்கு சிறப்பு குடிமைப் பணித் தயாரிப்பு பயிற்சியை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் மற்றும் மீன்வளம் – மீனவர் நலத்துறை இணைந்து மேற்கொள்கின்றன.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வாரிசுகள் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுகள் ஏதேனும் துறையில் பட்டப்படிப்பு முடித்த மீனவ சமூக இளைஞர்கள் விண்ணப்பப் படிவமும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் மண்டல/துணை/இணை இயக்குநர்கள் அலுவல கங்கள் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக பணிநாட்களில் இலவசமாக வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் தொடர்பான விண்ணப்ப bதாரர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 80 அடி ரோடு, நேரூஜி நகர், திண்டுக்கல் – 624 001
தொலைபேசி: 0451 – 2900148, 9751664565 என்ற எண்ணுகளில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெறலாம். மாவட்ட ஆட்சியர் சரவணன், அவர்கள் மீனவ இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதை உற்சாகப்படுத்தி தெரிவித்துள்ளார்.
















