மயிலாடுதுறையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மராத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர். பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மராத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஆறுபாதி மதகடிகயில் துவங்கி 10 கிலோமீட்டர் தூரமும், 17 வயதிலிருந்து 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் துவங்கி எட்டு கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு இரண்டு பிரிவுகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி ஐந்து கிலோமீட்டர் தூரம் என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகள் மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் துவங்கி வைத்தனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என 350 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு 5000 ரூபாயும் இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா 2000 ரூபாயும், நான்கு முதல் பத்து இடம் வரை தலா 1000 ரூபாய் என ரொக்க பரிசும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினர்.
















