திருவாரூர் ஜீப்ளி மார்க்கெட் பகுதியில் புதிய வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
திருவாரூர் நகராட்சி ஜீப்ளி மார்க்கெட் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் கீழ் ரூ.8.63 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வி.ஆர்.எம் சாலை அருகில் 1941ஆம் ஆண்டு கட்டப்பட்ட 84 ஆண்டுகள் பழமையான ஜூப்ளி மார்க்கெட் வணிக வளாகம் கட்டடம் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கையினை தொடர்ந்து, மிகவும் பழுதடைந்த கட்டடத்தினை இடித்து மேற்கண்ட இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 10.07.2025 அன்று திருவாரூரில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட புதிய வணிக வளாக கட்டடத்தில் 132 எண்ணிக்கை இரு சக்கர வாகனம் நிறுத்தத்துவதற்கான வசதியுடன் கூடிய ஸ்டில்ட் போலர் மற்றும் 54 எண்ணிக்கை கடைகள் கொண்ட தரைதளம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா,வார்டு நகர்மன்ற உறுப்பினர் அய்யனார், நகராட்சி பொறியாளர் திருமலைவாசன், திருவாரூர் வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், நகராட்சி ஊழியர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.















