தேனியில் புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார் மாவட்ட கலெக்டர்
கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து பேட்டிங் ஆடிய கலெக்டர்
தேனி மாவட்ட விளையாட்டு துறை சார்பில் புல் தரையுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் (turf cricket) இன்று துவங்கப்பட்டது
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 15000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த புல் தரை (turf கிரிக்கெட்) மைதானத்தை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
செயற்கைப் புல் தரையுடன் வீரர்கள் இரவு நேரத்திலும் விளையாடும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மாவட்ட விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் சிறிது நேரம் கிரிக்கெட் ஆடி வீரர்கள் வீசிய பந்துகளை பேட்டிங் மூலம் சிக்ஸர்கள் விலாசி மகிழ்ந்தார் இந்த நிகழ்வில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
