சென்னை : முன்னணி தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக இருந்த வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் இன்று காலை 5.30 மணியளவில் சென்னையின் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
1980 ஆம் ஆண்டு இவர்கள் வித்தியாசமானவர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் அறிமுகமான வேலு பிரபாகரன், 1989ஆம் ஆண்டு நாளைய மனிதன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக பணிபுரிந்தார்
அதனைத் தொடர்ந்து, சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், மோகன் நடித்த உருவம், பிரபு நடித்த உத்தமராசா ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பின்னர், புதிய ஆட்சி, அசுரன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல சமூகத்தை அச்சுறுத்தும் உள்ளடக்கங்களைக் கொண்ட படங்களை இயக்கினார்
தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்திய இவர், பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதியுற்ற இவர், மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இருந்தார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.
வேலு பிரபாகரனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பெயராளர்கள் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.