இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெறும் சாதனைகளால் மட்டுமல்ல, மனங்களை வென்று மக்கள் நாயகனாக மாறியவர் மகேந்திர சிங் தோனி. சிறிய நகரம், நடுத்தர குடும்பம், குறைந்த பிம்பம் – என்றாலும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ரசிகர்களின் உள்ளங்களை ஒவ்வொன்றாகப் பிடித்தவர்.
ரஜினி போல தோனியும் இலக்கணங்களை உடைத்தவர்!
தமிழ் சினிமாவில் வெள்ளைத் தோல், ஸ்டைலிஷ் தோற்றம் என்பவை ஹீரோக்களுக்கான அடையாளங்களாக இருந்த காலத்தில், ரஜினிகாந்த் அந்த தரைமட்ட இலக்கணங்களை உடைத்து மக்கள் நாயகனாக மாறினார். அதேபோல், கிரிக்கெட்டில் பெரிய நகரங்களிலிருந்து வரும் வசதிசம்பந்தப்பட்ட வீரர்களின் பின்னணியைத் தாண்டி, ராஞ்சியைச் சேர்ந்த தோனி, நீண்ட தலைமுடி, பயம் இல்லாத பாட்டிங் என தனி ஸ்டைலில் ரசிகர்களை வென்றார்.
அணுகுமுறையில் தனித்துவம் – “என் வழி தனி வழி”
தோனி காட்டிய தைரியமான, ஆனால் நிதானமான கேப்டன்சி தான் அவரை தனியாக பிரித்தது. வெற்றி பெற்றாலும் மிகைப்படுத்தாமல், தோல்வியிலும் அமைதியாக தன்னைத்தானே சமதானப்படுத்தும் அவரது அணுகுமுறை ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தது. உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் கோப்புகள் என வெற்றிகளின் பட்டியலை நிறைத்தவர். ஆனால், வெற்றி என்பது அவரது அணியின் ஒட்டுமொத்த செயல்திறனை வழிநடத்தியதிலிருந்தே வந்தது.
விக்கெட் கீப்பிங்கில் மேஜிக் – கிரிக்கெட்டை ஒரு கலையாக மாற்றியவர்
தோனி வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த விக்கெட் கீப்பராகவும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். மின்னல் வேக ஸ்டம்பிங், பார்வையின்றி ரன் அவுட், ஸ்பின்னர்களுடன் சரியாக கலந்துரையாடல் – இது எல்லாம் அவருடைய விக்கெட் கீப்பிங் கலைக்கே அடையாளங்கள்.
வெறும் விளையாட்டுக்குள் அல்ல, வாழ்க்கைக்குள் தோனி
தோனி மீது மக்கள் கொண்ட ஆர்வம் வெறும் கிரிக்கெட்டுக்குள் மட்டுமே இல்லாது, அவரது வாழ்க்கை முறை, பண்புகள், எளிமையான சமூக உணர்வுகள், அவரது பிஆர் பணிகளை தாண்டியும், மக்கள் உணர்வுகளில் தோனியின் உருவம் வேரூன்றியது.
தோனியின் பிம்பம் – வணிகத்தை தாண்டிய உண்மை
கடந்த சில ஆண்டுகளில் வணிக நோக்கத்தில் தோனியின் பெயரை பயன்படுத்திய முயற்சிகள் சில ரசிகர்களை பின்வாங்க செய்திருந்தாலும், தோனி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்பது உறுதி. அவரை மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது.