செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் விதவிதமான கலர் வண்ணங்களில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தி விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகவும் பிரபலமானது. தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் குறிப்பாக திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் திருப்போரூர் செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன மேலும் விநாயகர் தேர் அதிகாலையிலேயே வீடுகளில் உலா சென்றது
இந்த விழாவின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் மற்றும் சிலை மீது ரசாயன வண்ணம் பூசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பிறகு, விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்காக காவல்துறை முன்கூட்டியே பாதுகாப்பு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களுடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
