பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பக்தர்கள் பால் காவடி அழகு காவடி

பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில்
பக்தர்கள் பால் காவடி அழகு காவடி எடுத்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மூன்றாவது வெள்ளி கிழமை தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பக்தர்கள் பால்காவடி அழகு காவடி எடுத்து முக்கிய வீதிய வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலில் அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் பச்சைக்காளி பவளக்காளி திருவீதி உலா கட்சியும், அதனைத் தொடர்ந்து சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து வழிபட்டனர்.
பின்னர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவிதி உலா காட்சி நடைபெற்றது.

Exit mobile version