எஸ்.அக்ரஹாத்தில் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா
1000 பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
திருத்தணி,ஜூன்.7
எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் 1000 பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரத்தில் திரவுபதியம்மன் கோயிலில் 10 தீமிதி திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவை யொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.தினமும் மகாபாரத சொற்பொழிவு இரவில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்று வந்தது. மாலை தீமிதி திருவிழா யொட்டி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடைகள் உடுத்தி ஊர்வலமாக கோயில் வந்தடைந்தனர்.இரவு 8 மணி அளவில் கோயில் வளாகத்தில் அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஏராளமான கிராம மக்கள் கோயில் முன்பு கூடியிருக்க வாண வேடிக்கையுடன் காப்பு கட்டிய பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி திரவுபதியம்மனை வழிபட்டனர். திரவுபதி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டது.
