எவ்வளவோ கோடீஸ்வரர்கள் இருந்தும் ஏழை இளைஞனின் விலையில்லா உணவு திட்டம் பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயனடையும் விலையில்லா உணவு திட்டம் சாம்பார் வத்தல் குழம்பு ரசம் பொரியல் பாயாசத்துடன் அறுசுவை உணவு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் பல்வேறு தரப்பினரும் குறிப்பாக ஏழை மக்கள் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் பசியை போக்கும் வகையில் அறுசுவை உணவு இலவசமாக வழங்கும் திட்டம் தொடக்கம் சோறு சாம்பார் வத்தல் குழம்பு பொரியல் பாயாசம் மோர் உட்பட அனைத்தும் வழங்கி பசியை போக்கும் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது ஏழை குடும்பத்தில் பிறந்து பசியின் தவிப்பை உணர்ந்த சமூக சேவகர் கே.பி. ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து செம்பனார்கோவில் பகுதிகளில் தினமும் பசியோடு உணவு கிடைக்குமா என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் ஏழை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பசியை போக்கும் விதமாக பல்வேறு தரப்பினரின் உதவியோடு குறிப்பாக வணிகர்கள் உதவியோடு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார் குறிப்பாக மதிய உணவு அறுசுவை உணவு தினமும் இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து உணவை அருந்தி வாழ்த்தினர் தினமும் தொடர்ந்து இந்த உணவு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர் இந்த திட்டத்திற்கு வணிகர் சங்கத்தின் சார்பில் உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஏழைகளின் பசியை போக்கும் திட்டம் தொடங்க வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாக உள்ளது அதற்கு வசதி படைத்தவர்கள் உதவ முன் வர வேண்டும் என்பதும் வேண்டுகோளாக உள்ளது.
