ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் போட்டிகளை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள மேலக்கோட்டையூரில் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய சைக்கிள் சம்மேளனம், தமிழ்நாடு சைக்கிள் சங்கம் ஆகியவை இணைந்து ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் போட்டிகளை முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
இந்த போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் மேலும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி விளையாட்டு வீரர்களுடன் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்
மேலும் ஆசிய சைக்கிள் போட்டிகளில் கலந்துகொள்ள மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மியான்மர், லிதுவேனியா, நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட 11 வெளிநாடுகளில் இருந்து, 120க்கும் அதிகமான வெளிநாட்டு சைக்கிள் போட்டியாளர்கள் கலந்து கலந்து கொண்டனர்..
இந்த விழாவிற்கான விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழா தொடர்ந்து இந்த போட்டிகள் மூன்று நாள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

















