மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம். வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம். வாகன ஓட்டிகள் அவதி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி மூட்டம் நிலவியது. காலை 8 மணி வரை பனி பொழிவு இருந்தது. கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் இரவிலும் உஷ்ணம் நிலவி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை தரங்கம்பாடி சீர்காழி கொள்ளிடம் குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனியின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பொதுமக்கள்,நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவியதால் வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய விட்டு ஊர்ந்து சென்றன.

Exit mobile version