திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் மின்சார வாரிய மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக… தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (COTEE) மற்றும் CITU சார்பாக உரிமை போர்’ ஆர்ப்பாட்டம் திட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றிட வேண்டும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி சம வேலைக்கு சம உதவியும் வழங்க வேண்டும், ஹேண்ட் மேன்கள் மின்வாரிய உத்தரவுப்படி குழி எடுத்தல் கம்பம் நடுதல் கம்பி இழுத்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை கோரிக்கை முழக்கம் எழுப்பியும் கோரிக்கைகளை விலக்கி மண்டல செயலாளர் ராஜேந்திரன், மன்னார்குடி கோட்டச் செயலாளர் வீரபாண்டியன், திருவாரூர் கோட்ட செயலாளர்கள் குமார் மற்றும் வினோத் விளக்க உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கேங் மேன்கள் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டக் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்
