தென்னிந்திய ரயில்வே பென்சனர் அசோசியேசன் மற்றும் மத்திய மாநில ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம்

திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பாக சங்கத்தின் தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
“ஓய்வூதிய விதிகள் திருத்த நிதி மசோதா 2025 ஐ வாபஸ் பெற கோரியும்.. எட்டாவது ஊதிய குழுவை வழிகாட்டுதல் நெறி முறைப்படி உடனடியாக அமைக்க வலியுறுத்தி.. கோஷங்கள் எழுப்பப்பட்டது..
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் சண்முகம்.. மாவட்ட செயலாளர் முனியன், மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் கமலநாதன், மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம் பொருளாளர் மனோகரன், மாரியப்பன், தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வுதியர்கள் சங்கம் மாநில செயலாளர் குரு சந்திரசேகரன் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Exit mobile version