மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊராட்சி OHT ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50 கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
குறைந்தபட்ச கூலி சட்டம் அரசாணை 52 இன் படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் OHT ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊராட்சியில் பணி புரியும் OHT ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சர்வீஸ் தொகை வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழு ஊதியம் நிலுவைத் தொகை வழங்க வேண்டும்,
DBC பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
