காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் புதிய திட்டங்களுக்கு அனுமதி தராத நிலையில், ஏற்கனவே உள்ள மீத்தேன் உள்ளிட்ட எண்ணெய் எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழு ஒன்றை தமிழக அரச அமைத்தது. பல ஆண்டுகளைக் கடந்தும் ஆய்வு அறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை. இதனை கண்டித்தும் பழைய திட்டங்களை நிறுத்த வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் தலைமை தாங்கினார். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம்.

















