எம்.சாண்ட், பி. சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலையேற்றதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு.சீர்காழி நடைபெற்ற கட்டுமான பொறியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தினம் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ரவிக்குமார் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொறியாளர்கள், பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எம். சாண்ட், பி. சாண்ட் உட்பட கட்டுமான பொருட்கள் விலையேற்றந்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாயிரம் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான பணிகளுக்கு தட்டுப்பாடு இன்றி மணல் கிடைக்கும் வழியில் மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் கட்டுமானத் துறைக்கு என தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
