November 19, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போலி ஆவணங்களால் மலைப்பூண்டு புவிசார் குறியீடு பெறத் தடை கோரி மனு!

by sowmiarajan
November 16, 2025
in News
A A
0
போலி ஆவணங்களால் மலைப்பூண்டு புவிசார் குறியீடு பெறத் தடை கோரி மனு!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

கொடைக்கானல் மலைப்பூண்டுக்குப் புவிசார் குறியீடு (GI Tag) பெறுவதில் போலி ஆவணங்கள் மூலம் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது என்றும், அதைத் தடுத்து நிறுத்தி, குறியீட்டை உரிய விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கோரி மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டுக்குச் சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புவிசார் குறியீடு (Geographical Indication – GI Tag) பெறுவதற்கான முயற்சிகளை, கொடைக்கானல் விவசாயிகள் மற்றும் காய்கறிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் கீழ், கொடைக்கானல் மேலமலைப் பகுதிகளில் (பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், பூண்டி) பூண்டு, கேரட் உட்படப் பல பயிர்களைச் சாகுபடி செய்யும் 720 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிலையில், தேனி மாவட்டம், பூதிப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரால் நடத்தப்படும், ‘மாட்டுத் தொழுவத்தில் பதிவு செய்யப்பட்ட’ ஜியோ ஃபினாட்டிக் அக்ரா இன்டர்வேட் லிமிடெட் என்ற நிறுவனம், மலைப்பூண்டு விற்பனை செய்ய அனுமதி பெறப் போதிய பதிவு ஆவணங்கள் மற்றும் முகவரி இல்லாமல் விண்ணப்பித்துள்ளது.  இந்தப் போலி நிறுவனம் அளித்துள்ள ஆவணங்களில், நிறுவனத்தின் முகவரி மற்றும் பல தகவல்கள் தவறாக உள்ளன என்றும், புவிசார் குறியீடு வழங்கும் உயர் அதிகாரிகளுக்கு அன்னியர் எவரும் தெரியாதபடி இந்த முறைகேடுகள் நடக்கின்றன என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைக் கொண்டுள்ள இந்தப் போலி நிறுவனத்துக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டால், கொடைக்கானலில் உண்மையாகவே மலைப்பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரமும், அவர்களின் உற்பத்திப் பொருளின் விற்பனையும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதையடுத்து, கொடைக்கானல் விவசாயிகள் மற்றும் காய்கறிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் இரா. சாதிசானந்தம் அவர்களிடமும், உரிய அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டது.  அந்த மனுவில், முறைகேடான ஆவணங்கள் மூலம் புவிசார் குறியீடு பெற முயற்சிக்கும் அந்தப் போலி நிறுவனத்துக்கு அந்தச் சிறப்பு குறியீடு வழங்கப்படாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு (GI Tag) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு உரிமையாகும்.  கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு GI குறியீடு கிடைத்தால், அதன் தனித்துவமான சுவை, மணம் மற்றும் மருத்துவப் பண்புகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். இது சர்வதேச சந்தையில் அதன் மதிப்பை அதிகரிக்கும். இந்த உரிமம், பிற இடங்களில் உற்பத்தியாகும் தரம் குறைந்த பூண்டுகளைக் கொடைக்கானல் பூண்டாக விற்பதைத் தடுக்கிறது.

ஆனால், தற்போது போலி நிறுவனம் குறியீட்டைப் பெற முயல்வது இந்த நோக்கத்தையே சிதைக்கிறது.  GI குறியீடு என்பது நேரடியாகப் பயனடைய வேண்டியது, உற்பத்தியாளர்களான விவசாயிகள்தான். முறைகேடாக ஒரு நிறுவனம் அதைப் பெற்றால், உண்மையான விவசாயிகள் பலனடைய முடியாமல் போகும். எனவே, இந்த முறைகேட்டைத் தடுத்து, உண்மையாகவே மலைப்பூண்டு சாகுபடி செய்யும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு மட்டுமே GI குறியீட்டை வழங்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.

Tags: certification disputefake documents geographical indicationgi issuelegal actionmalai pundupetition filedproduct authenticity gi fraudregional product intellectual property
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பனியின் தாக்கம்: மலைப் பயிர்கள் கருகி விவசாயிகள் கவலை!

Next Post

டிப்பர் லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 | Retro tamil

November 19, 2025
கோவை நிகழ்ச்சியில் மோடிக்கு சர்ப்ரைஸ் தந்த சிறுமிகள் : பாதுகாவலர்களுக்கு உடனடி உத்தரவு !
News

கோவை நிகழ்ச்சியில் மோடிக்கு சர்ப்ரைஸ் தந்த சிறுமிகள் : பாதுகாவலர்களுக்கு உடனடி உத்தரவு !

November 19, 2025
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்
News

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

November 19, 2025
“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்
News

“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

November 19, 2025
Next Post
டிப்பர் லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

டிப்பர் லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு – தமிழக அரசு ஏமாற்றம்!

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு – தமிழக அரசு ஏமாற்றம்!

November 18, 2025
டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

November 19, 2025
தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

November 19, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

ரவுடிகளின் ராஜ்யமாக மாறிய சென்னை – EPS கொந்தளிப்பு

November 18, 2025
ஒரே நாளில் இருமுறை உயர்ந்த ஆபரணத் தங்கம் : சவரன் விலை ரூ.1,600 உயர்வு

ஒரே நாளில் இருமுறை உயர்ந்த ஆபரணத் தங்கம் : சவரன் விலை ரூ.1,600 உயர்வு

0
கோவை நிகழ்ச்சியில் மோடிக்கு சர்ப்ரைஸ் தந்த சிறுமிகள் : பாதுகாவலர்களுக்கு உடனடி உத்தரவு !

கோவை நிகழ்ச்சியில் மோடிக்கு சர்ப்ரைஸ் தந்த சிறுமிகள் : பாதுகாவலர்களுக்கு உடனடி உத்தரவு !

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 | Retro tamil

0
“குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்” – நடிகர் ரவி மோகன்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.