தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா நேற்று மாலை அயனாவரம் GS மஹால் திருமண மண்டபத்தில் அச்சங்கத்தின் தலைவர் விஜயகுமாரி தலைமையில் செயலாளர் சுமித்ரா, பொருளாளர் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் உயர் நீதிமன்றம் நீதியரசர் SK கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புதிய சங்கத்தை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் துணை தலைவர்கள் தேவி, அருள்மொழி, துணை செயலாளர்கள் அனுசுயா, சுகந்தி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
			















