அண்மையில் தொடர் தோல்விகளால் பரிதாப நிலையை சந்தித்து வரும் இந்திய அணியின் அணித் தேர்வுகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, உலகின் நம்பர் 1 பவுலராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவை 2வது டெஸ்டில் உடனடி ஆட்சேபமின்றி பெஞ்சில் அமர்த்தியதை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் தோல்வி, அதன் பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததும், இந்திய அணியின் புனரமைப்பு குறித்து கேள்விகள் எழுந்தன. இங்கிலாந்தில் தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடரில், முதல் போட்டியிலே தோற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 2வது டெஸ்டுக்கு முன்னிட்டு வலுவான பிளேயிங் 11-ஐ களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடியாக பும்ராவை அணியில் இருந்து விலக்கி, அவ்வளவாக பெரிய அனுபவம் இல்லாத ஆகாஷ் தீப்பை வாய்ப்பு வழங்கியது இந்திய அணித் தரப்பில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த முடிவை முதலிலேயே விமர்சித்த முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தொடர்ந்து, தற்போது தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் மிகுந்த கோபத்துடன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
“போர்ச்சுகலைப் போலவே இந்தியாவும் செய்கிறது!” என கூறிய அவர்
“உலகத்தில் தலைசிறந்த ஸ்டிரைக்கர் ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக விளையாடும் போது, அவரை ஒரு முக்கிய போட்டியில் பெஞ்சில் வைத்தனர். அதுபோல இந்தியாவும் உலகின் சிறந்த பவுலரை (பும்ரா) வைத்துக்கொண்டு, அவரை விளையாடவைக்காமல் இருப்பது பைத்தியக்காரத்தனம். ம்ம்ம்… கொஞ்சம் பொறுங்க, ஓ, இல்ல, என்ன! எனக்கு குழப்பமா இருக்கு,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தி அணியின் அணித் தேர்வு குறித்த குழப்பங்கள் தொடரும் நிலையில், 3வது டெஸ்டில் பும்ரா மீண்டும் பிஞ்சுக்கு வருவாரா என்பதுதான் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.