தனது வாரிசை தேர்ந்தெடுப்பது தலாய் லாமாவின் உரிமை தான் என மத்திய அரசு வலியுறுத்தியது
திபெத்தின் ஆன்மீகத் தலைவரும் புத்த மதத்தின் உலகப்புகழ் தலைவருமான 14-வது தலாய் லாமா, வரும் ஜூலை 6ஆம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி, அவர் வெளியிட்ட வீடியோவில், “தனது மறுபிறவியை ‘காடன் போட்ராங்’ அறக்கட்டளையே அடையாளம் கண்டு அங்கீகரிக்கும். இதற்குத் தலையிட வேறு யாருக்கும் உரிமையில்லை” எனக் கூறியுள்ளார்.
இந்தக் கூறியமைக்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:
“தலாய் லாமாவின் மறுபிறவியை அங்கீகரிப்பதில் மத மரபுகள், உள்நாட்டு சட்டங்கள், ‘தங்க கலச’ செயல்முறை மற்றும் மத்திய அரசின் அனுமதி ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான், சீனாவின் இந்தக் கருத்துக்கு இந்தியா உறுதியான பதிலை வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரும் அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு, “தலாய் லாமாவின் வாரிசு குறித்து முடிவு செய்யும் உரிமை அவருக்கே உள்ளது. இது ஒரு மத சம்பந்தமான விஷயம். அதை அரசியல் மையமாக்கக்கூடாது. அவரது வாரிசு குறித்து அவர் எடுத்த முடிவு திபெத்தியர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அவரைப் பின்பற்றுவோருக்கும் முக்கியமானது,” எனக் கூறியுள்ளார்.
தலாய் லாமா தஞ்சமடைந்துள்ள இந்தியா, திபெத்தின் ஆன்மீக சுதந்திரத்தையும், சீனாவின் நேரடி தலையீட்டையும் எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தலாய் லாமாவின் வாரிசு தேர்வு விவகாரத்தில், இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு வருங்காலத்தில் இருநாட்டு உறவுகளை மேலும் சிக்கலாக்கலாம் என்றே அரசியல் வட்டாரங்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது.