விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு தட்சிண ரெயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் ஓப்பன்லைன் கிளை செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், ரெயில்வேக்குள்ளும், கோட்டத்திற்குள்ளும் இடமாறுதல் செய்யப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் உதவி கோட்ட செயலாளர்கள் சாய்சார்லஸ், வேந்தன், அழகிரி, உதவி கோட்ட தலைவர் பலராமன், ஓப்பன்லைன் கிளை தலைவர் கமலக்கண்ணன், தலைமை கிளை தலைவர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தலைமை கிளை செயலாளர் வீரராகவன் நன்றி கூறினார்.
