ஸ்ரீ விசுவாவசு புரட்டாசி மாதம் 06 ஆம் தேதி
செப்டம்பர் 22, 2025 திங்கட்கிழமை, இன்றைய நட்சத்திரம் – மிருகசீரிடம் நட்சத்திரம்
நல்ல நேரம் : காலை 09. 15 முதல் 10.15 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : காலை 07.30 மணி முதல் காலை 09.00 வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை நேரம் : மதியம் 01:30 மணி முதல் மதியம் 03.00 மணி வரை
மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.
மேஷ ராசி நேயர்களே!

மேஷ ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
ரிஷப ராசி நேயர்களே!

ரிஷப ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 5 ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே மகிழ்ச்சிகள் அதிகமாக நிறைந்திருக்கும் மேலும் உங்களுடைய குலதெய்வ கோவில் வழிபாடு இன்று செய்வதற்கான பாக்கியம் உருவாகும் உங்களுடைய குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் தேவையில்லாத இடையூறுகள் பிரச்சனைகள் மன அழுத்தங்கள் ஆகியவை விலகி குதூகூலமாக உங்களுடைய அத்தனை விதமான செயல்பாடுகளின் மகிழ்ச்சியுடன் முடிப்பீர்கள் என்று பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
மிதுன ராசி நேயர்களே!

மிதுன ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார் வண்டி& வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் எடுக்கலாம் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அம்மாவழி உறவுகள் மூலமாக பொருளாதார ரீதியான முன்னேற்றங்களில் ஏற்படும்
தாய் மாமாஉறவுக்கும் உங்களுக்கும் இணக்கமான அன்பு ஏற்படும் அவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் இன்றைய நாளில் உங்களுடைய சந்தோசத்துக்கான செயல்பாடுகளில் அதிகம் மேற்கொள்வீர்கள் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது அக்கம் பக்கத்தினரிடம் பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது மூத்த சகோதர சகோதரிகள் மூலமாக முன்னேற்றமான அமைப்பு ஏற்படும் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க கூடிய ஒரு அற்புதமான நாள்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழிபட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 3ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் விடாமுயற்சி விஸ்வரூபம் வெற்றி என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு இன்றைய நாளில் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது அடிப்படை தேவைகளை இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள் இளைய சகோதர சகோதரிகள் மூலமாக அல்லது உங்களுடன் வேலை பார்க்கும் நபர்களில் வயது குறைந்தவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் மாணவ மாணவியர் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் முதன்மையான மாணவர்கள் என்று பெயர் வாங்க முடியும் பெண்களுக்கு இன்றைய நாளில் எனக்கு பிடித்த மாதிரி பொருட்களை வாங்கிக் கொள்வது மனதை பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!

சிம்ம ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 2 இடத்தில் சந்திர பாகவான் பயணம் செய்கிறார் இன்று நண்பர்கள் மூலமாக மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு அவர்கள் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் உதவி புரிவார்கள் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் இன்று பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் புதிய யுத்திகள் மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள் பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழிபட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் அன்னை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு ராசியில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் பெண்கள் மூலமாக ஆதாயம் உண்டு சகோதர சகோதரிகள் உங்களுக்கு மிக உதவியாக இருப்பார்கள் உங்களை விட வயது மூத்தவர்கள் உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் நன்கு கவனித்து சில தவறுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை சரி செய்து உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருப்பார்கள் தாத்தா மற்றும் பாட்டி உறவுகள் மூலமாக மிக மகிழ்ச்சி அடையக் கூடிய ஒரு அற்புதமான நாள் பெண்களுக்கு உங்களுடைய கல்லூரி தோழிகள் மூலமாக எதிர்பாராத நன்மை நடக்கும் குடும்பப் பெண்களுக்கு அம்மாவழி உறவான சித்தி பெரியம்மா அவர்களின் ஆதரவு அதிகம் கிடைக்கும் அதன் மூலமாக மனதுக்கு பிடித்த சில விஷயங்களை செயல்படுத்துவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்வதினால் எதிர்பாராத சிறு செலவுகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது உங்களுக்கு நல்லது இன்றைய நாளில் நீங்கள் மிக முக்கியமான முடிவு எடுப்பதை தவிர்க்கவும் நீர்நிலைகள் சார்ந்த பகுதியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் தேவை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது குடும்ப பெண்களுக்கு சந்திப்பதற்கான வாய்ப்பு உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சக ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய செயல்பாடுகள் ஏற்படும் காதலர்களுக்கு
மனமகிழ்ச்சிகள் தரக்கூடிய செயல்பாடுகளை செயல்படுத்துவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய வண்டி வாகனங்கள் வாங்க அதிர்ஷ்டமான நாள் உங்களுடைய மனதில் உள்ள கவலைகள் மனதில் உள்ள அழுத்தங்களை உடனிருப்பவர்களிடம் நீங்கள் பகிர்வது மூலமாக உறுதியாக நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் இன்றைய நாளில் உங்களுடைய அனைத்து விதமான முயற்சிகளும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தருகின்றன.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்வதினால் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே ஏதோ முந்திய தொடர்பு ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் இளைஞர்களுக்கு இன்றைய நாளில் புதிய வேலைவாய்ப்புக்கான மாற்றத்திற்குரிய நாள் உங்களுடைய அப்பா வழி உறவிலிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழி பட வேண்டிய தெய்வம் : பிரம்மசக்தி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!

மகர ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் இன்று 9 இடத்தில் பயணம் செய்கிறார் உங்களுடைய தேவைகளை அறிந்து உங்களுடன் இருப்பவர்கள் இன்று உதவி செய்வார்கள் மேலும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் உங்களுடைய உறவினர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவு உங்களுக்கு இன்று கிடைக்கும் காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள் புதிய காதலை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு பழைய விட்டு போன உறவுகள் தேடி வந்து பேசுவதற்கான வாய்ப்புகளும் உண்டு எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் மன நிறைவுடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வேலையில் உள்ள பணி சுமைகள் குறையும் மாணவர் செல்வங்கள் படிப்பி சிறப்பாக இருப்பார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : முத்துமாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!

கும்ப ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்வதனால் புதிய முயற்சிகள் எடுபடுவதை தவிர்க்க வேண்டும் வீண் விவாதங்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது வண்டி வானங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் பத்திரத்தில் கையெழுத்துக்கள் இடுவதில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது வாக்கு கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது பெண்கள் தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தினால் லாபம் உண்டு.
- அதிர்ஷ்ட எண் :5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மீன ராசி நேயர்களே!

மீன ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் கவலைகள் மனதில் உள்ள அழுத்தங்கள எல்லாம் விலகி நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் இன்றைய நாளில் உங்களுடைய அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் மூத்த சகோதரர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு வியாபாரிகளுக்கு புது வாடிக்கையாளர்கள் மூலமாக பொருளாதாரத்தில் சிறப்பு இருக்கும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அதை போல் அரசாங்கம் வேலைக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும் மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் உண்டு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உண்டாகும் யாரிடமும் விவாதம் செய்யக்கூடாது தேவையில்லாத விவாதம் பிரச்சனைகளை உண்டாக்கும் பொறுமையுடன் செயல்படும் போது தன்னம்பிக்கையுடன் செயல்படும்போது முன்னேற்றம் உறுதி பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கப் போகிறது.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.