சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வட கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த சக்தி புயல், மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து, வானிலை மையத்தின் அறிக்கை: வடகிழக்கு அரபி கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, நேற்று காலை நிலவரப்படி, குஜராத் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது. இது புயலாக மாறிய நிலையில், ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.

வட கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த சக்தி புயல், மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது. சக்தி புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாளை வடமேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளை அடையக்கூடும்.

நாளை மறுநாள் கிழக்கு வடகிழக்கு திசையில் நகரத் தொடங்கி படிப்படியாக வலுவிழக்க கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக் காலில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், அக்., 9 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version