ஜிபிஆர்எஸ் மூலம் நடத்தப்படும் கிராப் டேமேஜ் அசெஸ்மென்ட் முறையில் உண்மையான விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை சென்று சேராது: பழைய முறையையே பின்பற்ற அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துவிட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பிய விவசாயிகள்:- ஜனவரி மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 63 கோடி நிவாரணம் ஆய்வுக்கு இன்னும் வழங்கப்படவில்லை, தற்போது தமிழக அரசு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது இந்த பணமாவது விவசாயிகளுக்கு முழுமையாக சேருமா என்று விவசாயிகள் கேள்வி.
டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு, சேதமடைந்த நிலத்தை ஜிபிஆர்எஸ் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய முறையில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு நடத்துவதால் குத்தகைதாரர்கள், சாகுபடிதாரர்கள், நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் நிலம் பெற்றவர்கள், கோயில் நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், பட்டா மாறுதல் செய்யப்படாத நிலத்தில் சாகுபடி செய்பவர்கள், ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவுகளில் உள்ள இடங்களில் சாகுபடி செய்பவர்கள் ஆகிய விவசாயிகளுக்கு நிவாரணம் சென்று சேராது என்ற நிலை உள்ளது. மாறாக, நிலத்தின் உரிமையாளர், கோயில் நிர்வாகம், நிலத்தின் பழைய பட்டாதாரர் ஆகியோர் இதனால் பலனடைவார்கள். எனவே, இந்த புதிய நடைமுறையை கைவிட்டு, ஏற்கனவே உள்ள முறைப்படி, வேளாண் உதவி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தி, மழையால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்டா பாசன விவசாயகள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய அன்பழகன் கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையால் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் சீர்காழி செம்பனார்கோவில் தரங்கம்பாடி மயிலாடுதுறை குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. அதற்கு அரசு 63 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தது. அந்தத் தொகை இன்று வரை விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை, தொடர்ந்து தற்போது டிட்வா புயல் காரணமாக 15 நாட்கள் தொடர் மழையால் விவசாயிகள் சம்பா நடுநட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அழிந்த பயிர்களுக்கு தமிழக அரசு ஹெட்க்டர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்தத் தொகையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சென்று சேருமா என விவசாயிகள் கேள்வி எழுப்பினர். ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் செலவு செய்துள்ள எங்களுக்கு ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாயே நிவாரணம் கிடைக்கும். ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுக்களை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அஞ்சலக தபால் மூலமும் அனுப்பப்பட்டது.
பேட்டி.. அன்பழகன் டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர்.


















