அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி.. ‘டிஸ்கோ’ அணி வெற்றி

அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு டெலவர் மாகாணத்தில் ‘கூலி பவர் லீக் கிரிக்கெட் தொடர்” போட்டி நடைபெற்றது. 8 அணிகள் மோதிய போட்டியின் இறுதிப்போட்டியில் ‘டிஸ்கோ’ அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது:-

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. நடிகர் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டில் வெளியான திரைப்படத்தை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தி கொண்டாடினர். அமெரிக்காவின் டெலவர் மாநிலத்தில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்றன.

5 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ‘டிஸ்கோ’ அணி வெற்றிபெற்று ‘கூலி பவர் லீக்’ வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது. தொடர் நாயகனாக “கிரண்” தேர்வுபெற்று 100 வெள்ளி காசுகள் பரிசு பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்ற இந்த தொடர் பலரது கவனத்தை ஈர்த்தது. டெலவரை சார்ந்த ராஜ்குமார் இந்த தொடரை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த போட்டிகளில் இந்தியா மட்டும் இன்றி பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து அணியினரும் கூலி திரைப்படம் பார்க்க உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்று படம் பார்த்தனர்.

Exit mobile version