கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் வருவதற்கு முன்பே பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டது. பொதுவாக இத்தகைய பரிசோதனைகள் பகல் நேரங்களில் தான் நடைபெறும். அதற்காகவே இரவு நேர பிரேதப் பரிசோதனைக்கான காரணம் மக்களுக்கு விளக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,
“மாலை 6 மணிக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது” என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது தவறானது.
2021 நவம்பர் 15-ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையின் படி, தேவையான மருத்துவ வசதிகள் உள்ள இடங்களில் இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை நடத்தலாம்.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் கூட இரவு நேர பரிசோதனைக்கு அனுமதி உண்டு.
எனவே, இரவில் பிரேதப் பரிசோதனை நடத்துவது சட்டப்படி சாத்தியமான ஒன்று என்றும், அதைத் தடைசெய்யும் விதிமுறைகள் எதுவும் இல்லை என்றும் தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.