பூடானில் ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம் பதிவாகி, அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இன்று காலை பூடானில் முதலில் ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் சில மணி நேரங்களுக்கு பிறகு, மீண்டும் 2.8 ரிக்டர் அளவில் அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. இருப்பினும், குறுகிய இடைவெளியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மக்களை பெரும் பீதியடையச் செய்துள்ளன.
பூடானில் பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்களே அதிகம் நிகழ்வதாகவும், இவை சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை என்றும் புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். காரணம், இவ்வகை நிலநடுக்க அதிர்வுகள் நிலத்தின் மேற்பரப்புக்கு மிக விரைவாக சென்றடைவதால், சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.