கன்னியாகுமரி,திருநெல்வேலி, உட்பட 5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன் உட்பட பலர் பங்கேற்பு.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மாநில உணவுக்கழகம் தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறையை சாரந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன் கலந்துகொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார் குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்ககூடிய மிக முக்கிய துறையான உணவு பொருள் வழங்கல் துறையில் எந்த குக்கிராமங்களில் வசிக்ககூடிய மக்களுக்கும், பழங்குடியின மலைவாழ் மக்களுக்கும் உடனடியாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 5 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பங்களையும் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட குறைதீர் அலுவலர்கள் நிலையில் தீர்வு செய்யப்படாத புகார்கள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை தீர்வு செய்தல். அனைவருக்கும் குடும்ப அட்டை உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்தல், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்றோர். பழங்குடியினர். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய குடும்ப அட்டைகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்து அதன் மூலமாக அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், குடும்ப அட்டை தொடர்பாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மாநில உணவு ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் உணவு ஆணையத்தின் உறுப்பினர்கள் கருணாநிதி கணேசன், பெரியாண்டவர் கூட்டுறவு சங்கங்களின் நினைப்பதிவாளர் சிவகாமி, குமரி மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
