சீர்காழி காவல்நிலையத்தில் விநாயகர் ஊர்வலத்தில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ்,. தலைமையில் நடந்தது.
ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தின் நில உரிமையாளரிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
விநாயகர் சிலை தூய களிமண்ணால் தயார் செய்திருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற மாசுபடுத்தும் பொருள்களால் செய்யக்கூடாது. விநாயகர் சிலை அமைக்கப்படும் இடத்தில் பாதுகாப்பு நலன் கருதி சிசி டிவி கேமரா அமைக்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மேற்கூரைகள் அமைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். என்றார்.
