மது போதையில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

கரூர் , தாராபுரத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தாராபுரம் புறவழிச் சாலையில் கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டடத்தை திருப்பூர் சேர்ந்த ஒப்பந்ததாரர் கட்டி வருகிறார். இவரது கட்டிடத்தில் கொத்தனார் மற்றும் அவருடைய உதவியாளர் பெண் உதவியாளர் என 50க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர் அவர்களுக்கு என தனித்தனி செட் அமைத்து குடியிருந்து வேலை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் கொசூர் பகுதி சேர்ந்த நாகராஜ் 35 இவர் தனது மனைவி ராஜகுமாரி 25. இவருக்கு 2 பெண் குழந்தைகள் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவி இருவரும் அதே இடத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகராஜ் தனது குடும்பத்துடன் கொசு சென்று வந்த நிலையில் நேற்று காலை தாராபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிக்காக வந்து நேற்று பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலை தனது மேலாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு மது அருந்தி விட்டு வந்து தனது ரூமுக்கு வந்துள்ளார். அப்பொழுது தனது மனைவியுடன் சண்டை போட்டு இரவு 9 மணி அளவில் அங்கே கிடந்த கட்டையை எடுத்து மனைவி மீது சரா மாறியாக தாக்கியுள்ளார் இதில் ரத்த வெள்ளத்தில் ராஜகுமாரி இருந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ் திருச்சியில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்துவிட்டு ஃபோனை ஆஃப் செய்து விட்டு அங்கிருந்து வெளியூர் சென்று விடுகிறார் திருச்சியில் இருந்து அவரது உறவினர்கள் கட்டிடத்தில் தங்கி வேலை செய்யும் மற்ற தொழிலாளிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்து பார்த்தபோது ராஜகுமாரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் விஜயசாந்தி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி ராஜகுமாரி பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற விசாரணையில் ராஜகுமாரியின் கணவர் நாகராஜ் கொலை செய்துவிட்டு தப்பித்து தனது சொந்த ஊருக்கு சென்றபோது கரூர் போலீசார் தாராபுரம் போலீசாரின் அறிவுரையின்படி கரூரில் கைது செய்தனர். கரூரில் கைது செய்யப்பட்ட நாகராஜன் தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொடைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version