உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்துமயிலாடுதுறையில் பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்களை சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொருத்துக் கொள்ளாது என்று கூறி ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தலைமை நீதிபதியை நோக்கி ஷு வீசிய சம்பவத்தைக் கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுப்பில் பல்வேறு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடந்த போராட்டத்தில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் விசிக, தமிழர் உரிமை இயக்கம், மனிதநேய மக்கள் கட்சியினர் உள்பட பல்வேறு கட்சி மற்றும் இயக்கத்தினர் கலந்துகொண்டு நடந்த சம்பவத்தையும் பாஜக அரசையும் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version