தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் மின்தட்டுபாட்டினை சரி செய்ய கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோலிக்கைகளை வலியுறுத்தி மத்திய தமிழக அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அ.சீனிவாசன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மேகதாட்டு அனை கட்டுவதை தடுத்திட கோரியும் டிராக்டர்களுக்கு சாலை வரி விதிப்பதை தடுத்திட கோரியும் மேலும் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் தற்போது ஏற்படும் மின்வெட்டை சரி செய்திட கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர் ஆர்ப்பாட்டத்தில் 100 க்கு மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
