நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HBN டைரி HBN ஃபுட்ஸ் நிறுவனத்தின் பயனாளிகளிடம் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து ஏமாற்றிய நிதி நிறுவனத்தின் மோசடியை கண்டித்தும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களிடம் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து பயனாளிகள் சேர்த்த தொகையை திரும்ப பெற்று பயனாளிகளுக்கு மீண்டும் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
