மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி தனக்கன்குளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து. மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் கொரோனா காலத்தில் இருந்து தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்தி வருகிறார்.
அந்த வகையில் தீபாவளி, பொங்கல், தனது பிறந்தநாள் அன்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள விதவைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் தனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் ரோபோ சங்கர் மறைவின் காரணமாக கொடுக்க முடியவில்லை ஆனால் மக்களுக்கு தெரிவித்ததால் அதை தவிர்க்க வேண்டாம் என்று இன்று 50 கிலோ கறி, முட்டை என அசைவ விருந்து ஏற்பாடு செய்து 500க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்தும் பெண்களுக்கு சேலை ஆண்களுக்கு கைலிகள் என தனது குடும்பத்துடன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக அவர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.