பாரம்பரிய ஆடைகளுக்குப் புதிய பரிமாணத்தை அளித்து வரும் இந்தியாவின் முதன்மை நிறுவனமான ராம்ராஜ் காட்டன், இந்த ஆண்டு பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, தனது பிரத்யேக ‘கல்ச்சர் கிளப்’ (Culture Club) மேட்சிங் வேட்டி மற்றும் சட்டை ரகங்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே வேட்டி-சட்டை அணிவது தமிழர்களின் மரபு. அந்த மரபை இன்றைய தலைமுறைக்கு ஏற்றாற்போல நவீன வண்ணங்களிலும், வசதியாகவும் மாற்றி அமைப்பதில் ராம்ராஜ் காட்டன் எப்போதும் தனித்துவத்தைக் காட்டி வருகிறது.
இந்த புதிய தொகுப்பில், ராஸ்பெர்ரி, செர்ரி சிவப்பு, ரிச் ப்ளூ, கோல்டன் எல்லோ, ஜங்கிள் கிரீன் மற்றும் பெஸ்டோ போன்ற கண்கவர் வண்ணங்களில் வேட்டி மற்றும் சட்டைகள் செட்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் கச்சிதமான பாரம்பரியத் தோற்றத்தைத் தருகின்றன. மேலும், தந்தை மற்றும் மகன் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து மகிழ ஏதுவாக, சிறுவர்களுக்கும் மேட்சிங் ஆடை ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் மேட்சிங் வேட்டி-சட்டை செட்கள் மட்டுமின்றி, பிரிண்டட் சட்டைகள், டிஷ்யூ வேட்டிகள் மற்றும் சில்க்லுக் சட்டை ரகங்களும் இடம்பெற்றுள்ளன. இவை 100 சதவீத பருத்தி மற்றும் உயர்தர பருத்தி கலப்புத் துணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதால், நாள் முழுவதும் அணிவதற்கு மிக வசதியாக இருக்கும்.
புதிய தயாரிப்புகள் குறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவரும், நிறுவனருமான கே.ஆர். நாகராஜன் கூறுகையில், “பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகள் நமது கலாச்சாரத்தின் அடையாளம். இந்தத் தருணங்களில் பாரம்பரிய ஆடைகளை அணிவதை இளைஞர்களுக்கு எளிமையாகவும், ஸ்டைலாகவும் மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மதச் சடங்குகள் முதல் குடும்ப விழாக்கள் வரை அனைத்து இடங்களிலும் ஒரு பிரீமியம் தோற்றத்தைத் தரும் வகையில் இந்த ‘கல்ச்சர் கிளப்’ ரகங்களை உருவாக்கியுள்ளோம். தரம் மற்றும் நம்பிக்கையில் ராம்ராஜ் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பை இந்த ஆடைகள் பூர்த்தி செய்யும்” எனத் தெரிவித்தார்.
பொங்கல் சீர்வரிசையாகவும், பரிசளிக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்புகள், அனைத்து ராம்ராஜ் காட்டன் ஷோரூம்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி ஜவுளிக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பயன்பெறும் வகையில், www.ramrajcotton.in என்ற இணையதளம் மற்றும் பிற ஆன்லைன் வர்த்தகத் தளங்களிலும் இவை எளிதாகக் கிடைக்கின்றன. பாரம்பரியத்தையும் நவீணத்தையும் இணைக்கும் ராம்ராஜின் இந்த முயற்சி, இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை மேலும் வண்ணமயமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
