கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் குன்றத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை, புதிய தெருவைச் சேர்ந்த ரமேஷின் மகன் நித்திஷ், மேற்கு தாம்பரம் அருகிலுள்ள பூந்தண்டல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏ.ஐ.டி.எஸ்., 2ஆம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி வந்த அவர், நேற்று காலை நண்பர்களுடன் நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், நித்திஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விடுதியில் மாணவர்கள், சம்பவத்துக்கு முந்தைய இரவு பிரியாணி சாப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு ஒவ்வாமையால் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பதையும் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.