17 வயது மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி அருகே மணிகண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டில் பயிலும் மாணவியிடம், அதே கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் தமிழ் (வயது 53, திருச்சி கே.கே.நகர்) செப்டம்பர் 13-ஆம் தேதி ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேராசிரியர் தமிழை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.