திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ உ சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
இப்பல்கலைக்கழகத்தில் உள்ள 104 உறுப்பு கல்லூரிகள் மற்றும் நேரடியாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் என 37,376 பேர் பட்டம் பெற தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் ஆளுநர் ரவி நேரடியாக 759 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 650 பேர் ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெற்றனர். 759 பேருக்கும் ஆளுநர் ஆர் எம் ரவி தனித்தனியாக பட்டங்களை வழங்கிக் கொண்டிருந்தார் வழக்கம்போல் ஆளுநருக்கு மேடை ஏறுவதற்கு முன்பே பட்டம் அடங்கிய பைல் மாணவர்களின் கையில் வழங்கப்பட்டது மேடை ஏறி மாணவர்கள் அதை ஆளுநர் கையால் கொடுத்து வாங்கினர் இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாணவி ஒருவர் பட்டத்தை ஆளுநர் கையால் கொடுத்து வாங்காமல் அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகர் கையில் கொடுத்து வாங்கினார்.
ஆளுநர் ஆர்என்.ரவி இதை எதிர்பாக்காததால் அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து விசாரித்த போது அந்த மாணவி நாகர்கோவில் மாவட்டம் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்பது தெரியவந்தது தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுவதாக கூறி ஆளுநர் கையில் பட்டம் வாங்க மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி ஜீன் ஜோசப் அளித்த பேட்டியில்,
தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் ஆளுநர் எதுவும் செய்யவில்லை அந்த எண்ணத்தில் தான் இன்று ஆளுநர் கையால் பட்டம் வாங்க வேண்டாம் என முடிவு செய்தேன் மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதற்கு தகுதியான பலர் உள்ளனர் முதல்வர் இருக்கிறார் கல்வித்துறை அமைச்சர் இருக்கிறார் ஏன் அவர்கள் கையால் வட்டம் வழங்கக் கூடாது எனது இந்த செயலை இங்கிருந்த சக மாணவர்கள் பாராட்டினார்கள் எல்லோரும் ஆளுநர் கையில் வாங்கினாலும் பட்டத்தை வாங்கும் உரிமை மாணவர்களுக்கு இருக்கிறது அதை யாரிடம் வாங்க வேண்டும் என நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் பிற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை நான் செய்தது தவறாக இருந்தால் யாரும் என்னை வாழ்த்தி இருக்க மாட்டார்கள் ஆனால் என்னை பலரும் வாழ்த்தினார்கள் மண் மொழி இனம் காக்க மரியாதை தெரியாத ஒருவரிடம் இருந்து பட்டம் வாங்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன் என்று கூறினார்.
மனைவி ஜீன் ஜோசப் நாகர்கோவில் இந்து கல்லூரியில் பிகாம் முடித்துவிட்டு சிவகாசியில் உள்ள மெப்கோ கல்லூரியில் எம்சிஏ பயின்றார் அதை தொடர்ந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மனிதவளத்துறை பிஎச்டி( முனைவர் பட்டம்) முடித்துள்ளார். இன்று முனைவர் பட்டம் வாங்கும் போது தான் அவர் ஆளுநரை புறக்கணித்தார் ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநர் ரவி பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை பேசி வருவதால் அவருக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வருகிறது குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக ஆளுநரை விமர்சித்து வருகின்றனர் இதுபோன்ற சூழ்நிலையில் டாக்டர் பட்டம் பெற்ற மாணவி ஆளுநரை புறக்கணித்தது பரபரப்பு ஏற்படுத்தியது மாணவியின் கணவர் ராஜன் திமுகவில் மாவட்ட மாணவர் அணி செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.