சிதம்பரத்தில் இரு பிரிவு இஸ்லாமியர்கள் இடையே மோதல், 50 வருடங்களாக வராத பாரம்பரிய முத்தவலி தற்போது பொது மக்களால் நிர்வாகம் செய்து வரும் பள்ளிவாசலை அபகரிக்க முயற்சி என ஒரு தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு, சட்டரீதியாக நாங்கள் அணுகி வருவதாக மற்றொரு தரப்பு இஸ்லாமிய தரப்பினர் விளக்கம். மசூதிக்குள் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.
சிதம்பரம் லால்கான் தெருவில் நவாப் அப்துந்நபிகான் மஸ்ஜித் வஃக்ப் பள்ளிவாசல் உள்ளது, இந்த பள்ளிவாசல் சுமார் 300 தலைக்கட்டு குடும்பங்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் நிலையில் இந்த பள்ளிவாசல் தற்போது வப்பு வாரியத்தில் பாரம்பரிய முத்தவலி குடும்பத்தினர் சிலர் தங்களுக்கு நிர்வாகத்தை வழங்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது,
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இந்த பள்ளிவாசலை பாரம்பரிய கொண்ட குடும்பத்தினர் கைவிட்டு சென்றதாகவும் இந்த பள்ளிவாசலுக்கு சுமார் 78 ஏக்கருக்கு மேல் நிலம் இருப்பதாகவும் அதனையும் அவர்கள் பலருக்கு விற்று வந்ததாகவும் சில இடங்களை போக்கியத்திற்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தற்போது உள்ள நிர்வாகிகள்.
தற்போது இந்த பள்ளிவாசலை உருது பேசும் இஸ்லாமியர்கள் கடந்த 50 ஆண்டுகாலமாக குடிசையாக இருந்த நிலையில் தற்போது பள்ளிவாசலாக சிமெண்ட் காங்கிரட் மூலம் அமைத்து பராமரித்து ஒவ்வொரு குடும்பத்தினரும் தானாக செலவு செய்து வழிபாடு செய்து வரும் நிலையில் முன்பிருந்த பாரம்பரிய நிர்வாகத்தினர் தற்போது பொதுப்பொலிவுடன் இருக்கும் பள்ளிவாசலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பணம் கட்டி வப்பு வாரியத்தில் ரசித்து வாங்கிக்கொண்டு இத்தனை ஆண்டு காலம் பராமரிப்பு செய்த தங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் எங்களுக்கு சொந்தம் என உரிமை கூறுவது எந்த விதத்தில் நாயம் எனவும் அவர்களுக்கு உரிமை இல்லை என நாங்கள் கூறவில்லை ஆனால் சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக பள்ளிவாசலில் அத்துமீறி இன்று அநாகரிமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பள்ளிவாசலை நிர்வாகித்து வரும் இஸ்லாமிய மக்களிடம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பரப்பரப்பு குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில்.
பாரம்பரிய குடும்பத்தினர் அவர்கள் குற்றம் சாட்டும் அனைத்தும் பொய்யான தகவல் எனவும் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் சிலர் பள்ளிவாசலின் நிலத்தை விற்பதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அதனை மீட்கவே நாங்கள் தற்போது சட்டரீதியாக வந்த போது வேண்டுமென்றே தனி நபர்களை வைத்துக்கொண்டு தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் கூறும் குற்றச்சாட்டு முழுவதும் பொய்யானது எனவும் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வப்பு வாரியம் எங்களுக்கு வழங்கப்பட்ட அரசாணைப்படி நாங்கள் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
எப்படி இருந்தாலும் பள்ளிவாசலில் இரு பிரிவு இஸ்லாமியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு நடந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் வரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.













