தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

பொறையாரில் உள்ள தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட தரங்கம்பாடி மீனவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் சீகன் பால்கு மணி மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாலை நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். சிறப்பு பூஜைகள் செய்து மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையில் முதல் செங்கல்லை எடுத்து வைத்தனர். இதில் பங்கேற்ற தமிழ் சுவிசேஷ ருத்ரன் திருச்சபையினர் கிருஸ்தவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் ராஜாராமன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட எஸ்பி ஸ்டாலின், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சீகன் பால்கு மணிமண்டபம் தரங்கம்பாடியில் தான் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி
மாவட்ட தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தர்கள் தலைமையில் வேலைநிறுத்தம் செய்து மீனவர்களும், கடையடைப்பு செய்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தரங்கம்பாடி கடைவீதியில் காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென்று பொதுமக்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள இடத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் ஈடுபட்ட தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் பொது மக்களிடம் அறிவிக்கப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்றும் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வரை மணிமண்டபம் கட்டும் பணிகள் துவங்காது என்றும் மாற்று இடம் தரங்கம்பாடியில் இருந்தால் அங்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version