தரங்கம்பாடி அருகே சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பரிசுகளை வழங்கினார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் 22.1.2026 முதல் 8.2.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல்அமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026’ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்திருந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் செம்பனார்கோவில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இன்று மற்றும் நாளை நடைபெற உள்ள போட்டிகளில் முதல் நாள் போட்டிகளாக இன்று கிரிக்கெட், வாலிபால், ஓட்டப் பந்தயம்,குண்டு எறிதல்,உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பரிசுகளை வழங்கினார் மேலும் நாளை பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
