மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பொதுப்பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்:- கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பொதுப்பிரிவினருக்கான போட்டிகள் இன்று தொடங்கியது. முதல்நாளில் தடகளம், கைப்பந்து, கபாடி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பொதுப்பிரிவினருக்கான ஆண்கள் கைப்பந்து போட்டி, பெண்கள் கைப்பந்து போட்டி, பெண்கள் கபாடி ஆகியவற்றில் மயிலாடுதுறை ஆர்.ஹெச்.வி. ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷனில் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இவர்கள் கடந்த 2 வருடங்களாக கபடி, கைப்பந்து போட்டிகளில் மாவட்ட அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகின்றனர். வெற்றிபெற்ற வீரர்களை ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் நிறுவனரும், மாவட்ட அமெச்சூர் கபாடி கழக தலைவருமான ரஜினி, பயிற்சியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version