“பள்ளிகளில் கல்விதான் கற்றுக் கொடுக்கவேண்டும், சோறு போட அது ஹோட்டலா?” என்று கேட்பவர்களாக அறிவில்லாதோர் அன்று இல்லை, அதனால் தான் இன்று தமிழக கல்வி முன்னேறியுள்ளது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்று பள்ளிகளில் வழங்கப்பட்டது வெறும் மதிய உணவல்ல; அது நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம். பள்ளி ஹோட்டலா எனக் கேட்பவர்களாக அறிவுடையோர் அப்போது இருந்திருந்தால், இத்தனை நன்மைகள் தமிழகத்துக்கு வந்திருக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “நாட்டின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” என்றும் அவர் தெரிவித்தார்.