பீஹாரில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று புறப்பட்டார்.
பீஹாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் போது, சுமார் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பீஹாரில் தனது யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி, ‘இண்டி’ கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் மற்றும் தலைவர்கள் தன்னுடன் இணைந்து பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் இன்று பீஹாருக்குப் புறப்பட்டுள்ளார்.
குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை முதல்வர் ஸ்டாலினே தொடங்கி வைத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

















