கலைஞர் கோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்.
அரிய வகை புகைப்படங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக திருவாரூருக்கு இன்று மதியம் வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் ஓய்வு எடுத்த பின்பு ரோட் சோவில் கலந்து கொள்ள உள்ள நிலையில்,
காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 12 கோடியில் 7000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டார். இந்த கலைஞர் கோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலை அவரது பொது வாழ்க்கை சித்தரிக்கும் வகையில் அருங்காட்சியம் நூலகம் இரண்டு திருமண மண்டபங்கள் இரண்டு தியேட்டர்கள் ஆகியவை உள்ளது.
இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே என் நேரு, டிஆர்பி ராஜா, கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர் பூட்டி கலைவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.















