பூம்புகார் சுற்றுலாமையத்தை2கோடி36லட்சரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புபணி முதலமைச்சர் M.K.ஸ்டாலின் காணொளிகாட்சி மூலம் திறந்தார்

பூம்புகார் சுற்றுலா மையத்தை 2 கோடி 36 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார், பூம்புகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் :-

மயிலாடுதுறை மாவட்டம் காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் 2 கோடி 36 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் கடந்த 2022 ஆண்டு துவங்கி நடைபெற்ற வருகிறது. மணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுலா மையத்தை இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பூம்புகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், குத்துவிளக்கேற்றி சுற்றுலா மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பூம்புகார் கிராம மீனவ பஞ்சாயத்தார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version