திருப்பரங்குன்றம் பிரச்சனையை வாக்கு வங்கிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்துவதாக தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, ஏற்பட்ட பிரச்சனைகளால் ஹிந்து அமைப்புகளுக்கும், தமிழக காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது இரண்டு காவலர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி தீபம் ஏற்ற சென்ற பிஜேபி தலைவர் நைனார் நாகேந்திரன் எச். ராஜா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதால் நிலைமை தீவிரமானது.
இந்நிலையில்,சென்னையில் நடைபெற்ற சம்பந்தி போஜனம் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நைனார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், காவலர்கள், முதலமைச்சர் என அனைவரும் தவறு செய்துள்ளதாக கூறினார். இவர்கள் யாருமே நீதிமன்ற ஆணையை பின்பற்றவில்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
















