வேகமாக மூழ்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை

சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்.டி.யூ) மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதிலும் கவலைப்படத்தக்க வகையில் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து சென்னை உட்பட 5 நகரங்கள் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த 5 நகரங்கள்,

  1. ஆமதாபாத், குஜராத
  2. .கொல்கத்தா, மேற்கு வங்கம்
  3. மும்பை, மகாராஷ்டிரா
  4. .சூரத், குஜராத்
  5. சென்னை, தமிழ்நாடு

2014-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-3.7 செ.மீ என்ற அளவில் சென்னையின் சில பகுதிகள் மூழ்கியுள்ளதாக என்.டி.யூ. ஆய்வு தெரிவிக்கிறது.

சென்னையில் வேகமாக மூழ்கும் பகுதியாக தரமணி இருப்பதாக என்.டி.யூ ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த பகுதி ஆண்டுக்கு சராசரியாக 3.7 செ.மீ அளவுக்கு மூழ்குவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

விவசாயம், தொழில் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்கு அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகள் வேகமாக மூழ்கிவருவதாக சென்னையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version